தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் 156 குழந்தைகளுக்கு புத்தகப்பைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, ரெடிங்டன் பவுண்டேசன் சார்பில் புத்தக பைகள் வழங்கும் விழா மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு புத்தக பைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்கு உதவி செய்வதும், மருத்துவ பாதுகாப்பு மற்றும் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது உள்பட பல்வேறு உதவிகள் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.
Discussion about this post