24 மணி நேரமும் கடைகளை திறந்திருக்கலாம் என தமிழக அனுமதி வழங்கியிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இரவிலும் விழித்திருக்கும் தூங்கா நகரமான மதுரை மாநகர் மக்களும்,வியாயாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வியாபாரிகள் மட்டுமல்லாது தொழிலாளர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து அரசாணை வெளியிட்டது.
இது “தூங்கா நகரம்” மதுரைக்கு மேலும் சிறப்பை அளித்துள்ளது. இரவு அங்காடி என இலக்கியத்திலும் புகழப்பெற்ற மதுரை நகரம், தொடர்ந்து இயங்குகிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே, கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி உள்ள நிலையில் தற்போது வழங்கப்பட்டு இருக்கக் கூடிய அரசாணை, அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 12 மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தபோது, பொருட்களை கொள்முதல் செய்து குடோனில் வைப்பதற்கு, நேரமின்மை ஒரு பெரும் குறையாகவே இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய கிராமப்புற இளைஞர்கள் கல்லூரி படிப்புடன், இனி பகுதி நேர வேலையும் செய்து படிக்கும் காலத்திலேயே வருமானம் ஈட்டக்கூடிய சூழலும் ஏற்படும்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு,தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் அரசாணை வெளியிட்டது மதுரையில் உள்ள அனைத்து மக்களுக்குமே ஒரு இனிப்பான ஒரு செய்தியாகவே அமைந்தது என்று சொல்லலாம்
“சும்மாவே மதுரக்காரங்க ராத்திரி 1.15 மணிக்கு ரோஸ் மில்க் குடிப்போம் , சுட சுட முட்டை பரோட்டா சாப்பிடுவோம்… இப்போ சொல்லவா வேணும் … “மாப்ள பசிக்குது டா .. வா மாப்ள சூடா இட்லியும் குடல் குழம்பும் சாப்பிடப்போலாம் .. என்று சொல்லித் திரியும் இளைஞர்கள் பட்டாளம் ஒருபுறம்”,வெளியூரிலிருந்து பணிகளை முடித்து விட்டு தனது வியாபாரத்திற்காக பொருட்களை வாங்க இரவு 10 மணிக்கு மேல் ஆனாலும் நம்பிக்கையுடன் வாங்க காத்திருக்கும் சில்லரை வியாபாரிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான் கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி உள்ள நிலையில் தற்போது வழங்கப்பட்டு இருக்கக்கூடிய அரசாணை ஆனது பெரும் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம் .
உதாரணத்திற்கு சங்ககாலத்தில் சிலப்பதிகாரத்தில் கூட பார்த்தோமேயானால் கோவலன் கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கி வந்தது அவருடைய வியாபாரம் பகல் நேரத்தை விட இரவில் தான் அதிகம் இருந்தது. அதனால்தான் இரவுப்பொழுதில் நடக்கும் வியாபாரத்தை அல் அங்காடி என்று சொல்லுவார்கள் அதுவே பகல் நேரத்தில் நடக்கும் வியாபாரத்தைப் பகல் அங்காடி என்றும் சொல்லுவார்கள்.
மதுரையில் உள்ள உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியின் போது, வியாபாரிகள் மட்டுமல்ல தொழிலதிபர்கள் ஊழியர்களுடைய வாழ்வில் விளக்கேற்றிய தமிழக அரசுக்கு எங்களது கோடான கோடி நன்றி என்றும், மதுரை நகரப் பகுதிகளில் மட்டுமே உணவுப் பொருள் வியாபாரிகள் கடைகள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் அதிகமான கடைகளும், உணவுப்பொருள் அல்லாத கடைகள் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் உள்ள நிலையிலும்.நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட மதுரை நகர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க கூடிய ஒரு சூழ்நிலையை தற்போது தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும் நாடு செழிக்க வளம் கொழிக்க தொழில்வளம் பெருக அரசாணை பிறப்பித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்
அதேபோன்று அரை நூற்றாண்டுகளாக மதுரையில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் தூங்காநகரம் அதற்கு மேலும் தூங்காநகரம் ஆகவே இருக்கக்கூடிய வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய நிறைய கிராமப்புற இளைஞர்கள் கல்லூரி படிப்போடு இனி பகுதி நேர வேலையும் செய்து படிக்கும் காலத்திலேயே வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வகையில் இந்த அரசாணை இருப்பது
மதுரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அவர்கள் வாழ்வில் முன்னேற ஒரு வித்தாக அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
Discussion about this post