கடந்த 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளதாக, கோவை ஜி.எஸ்.டி. ஆணையர் குமரேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், துடியலூ ஜி.எஸ்.டி. குறித்து இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று துவங்கியது. சிறப்பு விருந்தினராக கோவை ஜி.எஸ்டி. ஆணையர் குமரேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜி.எஸ்டி. மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசாங்கம் வளர்ச்சி அடைய முடியும் என்றார். ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் பொருட்களின் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குமரேஷ் கூறினார்.
Discussion about this post