கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் தமிழக எல்லையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் முந்தல் சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளன இன்று மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கேரளாவில் இருந்து வந்த அரசு பேருந்தில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Discussion about this post