செங்கத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், குலுக்கல் முறையில் மழலையர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத ஒதுக்கீட்டில், நடப்பாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக, மாணவர்களின் விபரங்களை பள்ளியின் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்த பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுடன் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அப்போது, விதிமுறைப்படி 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 101 மாணவர்களின் பெயர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. மாணவர்களை தேர்வு செய்யும் பணி வட்டார கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
Discussion about this post