ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான டெட் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது. இதேபோல், 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் டெட் தேர்வை எழுதுவதற்காக சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 1552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 88 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இரண்டு தாள்களாக நடைபெறும் தேர்வில், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் முதல் தாள் தேர்விலும், இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் இரண்டாவது தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post