நாமக்கல்லில் பச்சிளம் குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை சுகாதார துறை ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 11 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அனைவரையும் நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கருணாநிதி முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஐர்படுத்தினர். இதையடுத்து 11 பேரின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 20-ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 11 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
Discussion about this post