அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தை அடுத்த கெட்டி செவியூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்வதாக குறிப்பிட்டார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், சீருடை வழங்கும் பணி இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post