வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை காலம் முடிவுக்கு வந்த நிலையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. சில இடங்களில் மழை பெய்தும் வெப்பம் தணியவில்லை. மத்திய பிரதேசத்தின் நவ்காங் பகுதியில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலையாக 47.9 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் புழுதி புயலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post