பைக் ரேஸில் ஆர்வமுள்ளவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள ரேஸ் ட்ராக்கில் மட்டும் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் சாலைகளில் பயிற்சி செய்யக்கூடாது என்றும் ஹோண்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பு துறை துணைத் தலைவர் பிரபு நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை மாதம், ஹோண்டா நிறுவனம் சார்பில், தேசிய அளவு பைக் ரேஸ் நடைபெற இருக்கிறது. மோட்டோ திரி தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியை சர்வதேச அளவில் ஹோண்டா நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய ஹோண்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பு துறை துணைத் தலைவர் பிரபு நாகராஜ், இந்த பந்தயத்தில் போட்டியிடுவதற்காக 13 முதல் 17 வயதுக்குள் இருக்கும் வீரர்களை இந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post