உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி சிறப்பு ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரையறை என பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி பழனிசாமி, தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் உள்ளாட்சி தேர்தல் மேற்கொள்வது குறித்து சிறப்பு ஆலோசனைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி வழங்கினார்.
Discussion about this post