முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை, நீர்திறப்பு குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது
முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து இக்குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அணையில் இன்று ஆய்வு செய்யவுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் விஷ்வாமேத்தா ஆகியோரும் ஆய்வில் ஈடுபட உள்ளனர். பராமரிப்பு பணிகள், நீர் வரத்து குறித்தும் மூவர் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
Discussion about this post