தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று தமிழக மக்கள் நிரூபித்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக சார்பில் சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவிலேயே எந்த முதல்வரும் செய்யாத அளவுக்கு இஸ்லாமிய மக்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்களை செய்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் என்றுமே அதிமுக ஆட்சி நடைபெறவேண்டும் என்று தமிழக மக்கள் நினைப்பதாகவும், 9 தொகுதி வெற்றியின் மூலம் அது நிருபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான் என்று கூறிய அவர், தமிழகத்தை ஆளலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிப்பதாகவும், அது ஒருபோதும் பலிக்காது எனவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post