மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 6-ம் வகுப்பிலிருந்து 3ஆம் மொழியாக இந்தியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவை தமிழிலேயே பதிவிட்டுள்ள அவர், தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முயற்சியை பிரதமர் துவக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post