தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா பகுதியில், 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் மேற்கு வங்கக்கடலில், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை வேலையில் இடியுடன், மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி உருவானால், ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், பெரும்பாலும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post