ரஷ்யாவிடம் இருந்து எஸ் -400 ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்துள்ளது
இந்தியாவின் ராணுவ வர்த்தக கூட்டாளிகளாக அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விளங்கி வருகின்றன. அதே நேரம் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளிடம் ஆயுதம் வாங்கும் போது, இந்தியாவை அமெரிக்கா மிரட்டி வருவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த அக்டோபரில் ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ் – 400’ ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இது அமெரிக்காவை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர்,ரஷ்யாவுடனான ஒப்பந்தம் அமெரிக்கா – இந்தியா ராணுவ உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இந்தியா மீது தடைகள் விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். வானில் சென்று கொண்டிருக்கும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் எஸ் 400 ஏவுகணைகள் விரைவில் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post