திருச்சி மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ஹெல்த் கிளினிக் மற்றும் நாப்கின் இயந்திர வசதியுடன் கூடிய பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறையானது, திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய முன் மாதிரி கழிப்பறையை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 40 லட்சத்தை ஒதுக்கிய மாநகராட்சி நிர்வாகம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இடத்தை தேர்வு செய்து, பணிகளை துவக்கியது. இந்த கழிப்பறையில், சென்சார் மூலம் இயங்கும் வகையில் தானியங்கி கதவுகளும், மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக் கொள்ளும் இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளது. அதே போல் உபயோகித்த நாப்கின்களை சுகாதார முறையில் சாம்பலாக மாற்றும் இன்சிலேட்டர் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர இந்த வளாகத்திலேயே மகளிருக்கான ஹெல்த் கிளினிக் ஏற்படுத்தப்படுகிறது. இந்த கட்டிடம் இம்மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post