அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் பகுதியில் பொதுப்பணி துறை சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்பு மனைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடப் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, தற்போது முடிவு பெற்றுள்ளன. 76 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் மொத்தம் 200 குடியிருப்புகள், 10 மாடி தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஜூன் மாதம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post