கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுகே 22 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் மற்றும் விருத்தாசலம் துணை ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நடைபெற்று வரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டு அறிந்தனர்.
Discussion about this post