கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தை சேர்ந்த நெசவாளர் காரப்பன் என்பவர் 45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்பித்து கைத்தறித்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறார்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை, பகத்தூர், பள்ளேப்பாளையம், கிச்சகத்தியூர், வச்சினம்பாளையம், மூலத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் கைத்தறி நெசவு பிரதானமாக இருந்து வருகிறது. காலம் காலமாக முன்னோர்கள் வழியாக நெசவு தொழில் செய்து வரும் இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அன்மைகாலமாக இந்த தொழிலை விட்டு வேறு தொழில்களை நாடி வெளியே சென்று வருகின்றனர். இந்தநிலையில் இதனை தடுக்க சிறுமுகை பகுதியை சேர்ந்த காரப்பன் என்ற நெசவாளர் கைத்தறி நெசவில் பல்வேறு புதுமைகளை புகுத்தி அதனை நவீனப்படுத்தி 45 நாட்களில் கைத்தறியை பயிற்று வித்து மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் பெண்களை நெசவு தொழில் முனைவோராக மாற்றி வருகிறார். பெண்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறே நாள் ஒன்றிக்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறார்.
Discussion about this post