இளம் தலைமுறையினர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க, அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், புகையிலை விழிப்புணர்வு பாடல், டிஜிட்டல் ஸ்டோரி, மானிட்டர் செயலி, விளம்பர போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறினார். இதனை தடுக்க, சுகாதாரம் மற்றும் கல்வித்துறையும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
Discussion about this post