தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே ஆந்திர முதலமைச்சராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் இ.எஸ்.எல் நரசிம்மன், ஜெகன்மோகனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிராமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஜெகன்மோகன் ரெட்டி பேச துவங்கியதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் 151 உறுப்பினர்கள் பலத்துடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
Discussion about this post