ராமு சாகு என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி.அவர் கைகளால் ஓட்டும் டிரைசைக்கிளில் உணவு டெலிவரி செய்துள்ளார்.அவர் கைகளால் வாகனத்தை இயக்கிக்கொண்டு உணவு டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இவருக்கு எலக்ட்ரிக் வாகனம் வழங்கக்கோரி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்ற ஜோமாட்டோ நிறுவனம் ராமுவுக்கு எல்க்ட்ரிக் வாகனம் வழங்கியுள்ளது.அதனை ஜோமாட்டோ நிறுவனத்தின் CEO தனது ட்விட்டர் பக்கத்தில் பகரிந்துள்ளார்.’எங்களின் தொழிலாளர் ராமு, எலக்ட்ரிக் வாகனத்தை மனதார ஏற்றுக்கொண்டார் அது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
UPDATE: Our delivery partner Ramu Sahu has gracefully accepted the electric vehicle that we were keen on him having. ? pic.twitter.com/LrJp86tZ8h
— Deepinder Goyal (@deepigoyal) May 28, 2019
தற்போது அவரின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனம் வழங்கியது அனைவராலும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
Ramu getting a hang of his new ride. ? pic.twitter.com/C7iaxWtDCf
— Deepinder Goyal (@deepigoyal) May 28, 2019
Discussion about this post