விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக, திருச்சி என்.ஐ.டியில், தொழில்நுட்ப அடைவு மையம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் வகையில், இஸ்ரோவுடன், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்து, ஆய்வு மாணவர்களுக்காக தொழில்நுட்ப அடைவு மையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம், இஸ்ரோ தலைவர் சிவன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். திருச்சி என்.ஐ.டி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், இஸ்ரோ திறன்மேம்பாட்டு திட்ட இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Discussion about this post