நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது
17 வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , இளம் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தும் அக்கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் ராகுல் தனது முடிவில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. அவர் கடந்த இரண்டு நாட்களாக கட்சி தலைமை அலுவலகம் வரவில்லை.இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.பிக்களின் கூட்டம் வரும் ஜீன் 1ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்
Discussion about this post