கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடியத் தொடங்கி, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக 700 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், இந்த நிதியை பெற மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வேறு வெளிநாடுகள் அளிக்கும் நிதியையும் ஏற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2004ல் சுனாமி ஏற்பட்ட போது, தமிழகத்திற்கு வெளிநாட்டு நிதி உதவியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பேரிடர் காலத்தில் வெளிநாட்டு உதவியை ஏற்க வாய்ப்பளிக்காத வகையில், சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை காரணம் காட்டி தற்போது கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்க உள்ள நிதியுதவி மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post