ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான விண்கல் ஒன்று விழுந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் தெற்கு கடல் பகுதியில் கடந்த 21ம் தேதி, வானில் இருந்து ஒரு விண்கல் வந்து கொண்டிருந்தது. அருகில் வந்ததும் பயங்கரமாக எரிந்து ஒளிவீசி பின்னர் மறைந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகள் அனைத்துமே பகல்போல் காட்சியளித்தன.
இது குறித்து கூறும் விஞ்ஞானிகள், வானலில் இருந்து விழுந்த கல், சூரியனை சுற்றிவரும் வால்மீன்களின் ஒன்றிலிருந்து உடைந்த ஒரு சிறிய பகுதியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கல் வானத்தில் வீசிய ஒளியானது, ஒரு சிறிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படுத்தும் அளவுக்கு நிகரானது எனவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post