இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு, 311 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பட்லர் 106 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பும்ரா தனது அபார பந்து வீச்சால், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். 5ஆம் நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 1 விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இங்கிலாந்து அணி தனது வெற்றிக்கு 210 ரன்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி செயல்பட்டதாக இங்கிலாந்து வீரர், ஸ்டூவர்ட் பிராடுக்கு ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்டின் விக்கெட்டை வீழ்த்திய போது, ஐசிசியின் விதிகளுக்கு புறம்பாக ஸ்டூவர்ட் பிராடு ஆக்ரோஷமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post