தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் அரசு மேனிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வந்ததால், கடந்த 2006ல் மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த பள்ளியை முதன்மை மாதிரிப் பள்ளியாக அறிவித்த தமிழக அரசு அடிப்படை வசதிகளை அமைத்து கொடுத்தது. 2019- 20ம் கல்வியாண்டில் LKG , UKG முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 250 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றுள்ளது
Discussion about this post