வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் தவான் 1 ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 அடுத்தடுத்து வெளியேறினர். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல்-டோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் லோகேஷ் ராகுல் 99 பந்துகளில் 108 ரன்களும் குவித்தனர்.
360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 73 ரன்களும், முசிபூர் ரஹிம் 90 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ரன் குவிக்க தவறியதால் அந்த அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Discussion about this post