கடந்த ஓராண்டாக மிகவும் சிரமப்பட்டு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ள கோதண்ட ராமர் சிலை அங்குள்ள கோதண்ட ராமர் ஆலயத்தில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பெங்களூருவில் உள்ள ஈ.ஜி.புரா என்ற பகுதியில் நிறுவப்படுவதற்காக 158 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் செதுக்கப்பட்டது. 350 டன் எடை, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல் வெட்டி எடுக்கப்பட்டு கோதண்ட ராமர் சிலையின் முகம், கைகள் செதுக்கப்பட்டன. இதையடுத்து, இந்தச் சிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட சரக்கு லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு புறப்பட்டது. பிரமாண்டமான இந்த சிலை செல்ல பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒருசில இடங்களில் கடைகள், குடியிருப்புகளை இடிக்க வேண்டிய சூழலும் உருவானது. இதனால் ஆங்காங்கு நிறுத்தப்பட்ட கோதண்ட ராமர் சிலைக்கு பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். கடந்த வாரம் கோதண்டராமர் சிலை கர்நாடக மாநிலத்தை சென்றடைந்தது. பெங்களூருவில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஈஜிபுரா. இந்த பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில்தான் இந்த சிலை நிறுவப்படவுள்ளது
Discussion about this post