தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. பெரும்பாலான நகரங்களில் வெப்பநிலையின் அளவு 100 டிகிரியையும் தாண்டி உள்ளது.இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் நிக்கோபார் தீவுகளில் மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளதை அடுத்து, ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 4ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதன் மூலம் தென்மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post