காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விட தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்ட உள்ளன.
Discussion about this post