கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்கின்றனர்.
கோடை சீசனையொட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குன்னூரில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் ரன்னிமேடு வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 11.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு 12.00 மணி அளவில் ரன்னிமேடு ரயில் நிலையம் வந்தடைகிறது. ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இருந்து 1.00 மணியளவில் புறப்பட்டு ஒன்றரை மணிக்கு குன்னூரை வந்தடைகிறது.
மலை குன்றுகள், அருவிகள், குகைகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் கண்டு ரசிக்கின்றனர்.
Discussion about this post