பள்ளி விடுமுறை முடிவதற்குள் ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் தொடங்கியுள்ளன. சேலத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, கோடையில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மண்டலம் வாரியாக குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் ஏற்காட்டில் நடைபெற்று வருவதாகவும் பள்ளி விடுமுறை முடிவதற்குள் ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post