கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சுப்பராயர் சுவாமிகள் கோயில் குளத்தை புனரமைத்து தர தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுப்பராயர் சுவாமி கோயிலின் தீர்த்தக் குளம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்துள்ளது. தீர்த்த குளத்தின் படித்துறைகள் பழுதடைந்துள்ளதோடு கழிவு நீரும் கலப்பதால் பொதுமக்களும், பக்தர்களும் குளத்தை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள பொதுமக்கள் குளத்தை உடனடியாக சீர் செய்து தருவதுடன், தொடர்ந்து பராமரிக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post