மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது இதில் தென் மாவட்டங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் . விவசாயத்தில் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் பயன்பாடு , நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் , விவசாயம் சார்ந்த வியாபார முதலீடு ஏற்படுத்துவது , புதிய தொழில்நுட்பத்தை பயண்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. அரசு மானிய விலையில் பயிர் , இயந்திரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதுபோன்ற கண்காட்சியில் இயற்கை விவசாயம் , சிறுதானிய உணவு வகைகள் , மலர் உற்பத்தி போன்றவை பயனுள்ளதாக இருந்ததாகவும் , எங்கும் கிடைக்காத அரிய வகை விதைகள் கிடைத்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஏராளமான இளைஞர்கள் விவசாய கண்காட்சியை பார்வையிட்டனர். இதுபோன்ற கண்காட்சிகள் இளம் தலைமுறையினரை புதிய தொழில்நுட்பத்தோடு விவசாயத்தில் ஈடுபட வழிவகை செய்ய உதவியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Discussion about this post