வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
Discussion about this post