காணாமல் போன குழந்தைகளை பற்றி நினைவூட்டும் விதமாக இன்று சர்வதேச தொலைந்துபோன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல பகுதிகளில் வழி தெரியாமலும், நினைவை இழந்து தவறி சென்றும் பல குழந்தைகள் பல்வேறு இடங்களில் இன்றளவும் தொலைந்து போவது நாமறிந்த ஒன்று. இந்நிலையில் தொலைந்து போன குழந்தைகளின் பிறந்த தினமறிந்த அவர்களின் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைகளின் தற்போதைய நிலைபற்றி அறிய வாய்ப்பில்லை.
இந்நிலையில் அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் அவர்கள் காணாமல் போனதை அனுசரிப்பதற்காக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நாளாகவே வருடந்தோறும் மே மாதம் 25 ஆம் நாள் உலக அளவில் தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Discussion about this post