சூரத் நகரில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சார்தானா என்ற இடத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தின் 2ம் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாம் தளம் முழுவதும் தீ பரவியதால் உயிர் பிழைப்பதற்காக 3ம் தளத்தில் இருந்து சிலர் கீழே குதித்தனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே தீ விபத்து தொடர்பாக கட்டிடத்தில் உரிமையாளர், பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post