மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் மக்களின் மனங்களை பாஜக வென்றிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அயராத முயற்சிக்கு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்றும், பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருவருக்கும் வாழ்த்துகள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வலிமையான, ஒற்றுமையான நாடாக திகழும் என்றும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post