ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக பிரெக்ஸிட் வரைவு மசோதாவை பிரதமர் தெரசா மே 4வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்து கடந்த 2016ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதற்கென நான்கு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவடைந்தது. ஆனால் பிரெக்சிட் ஒப்பந்த வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்று முறை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 4வது முறையாக இதற்கான வரைவு மசோதாவை தெரசா மே தாக்கல் செய்துள்ளார். கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர்கள் கட்சி எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் இதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் எதிர்க்கால நலனை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனுடன் நிரந்தர ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியேற வேண்டும் என்பது பெரும்பாலான எம்.பி-க்களின் கோரிக்கையாகும். இந்த நிலையில் ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்து விட்டதால் மீண்டும் கால அவகாசம் கேட்க பிரதமர் தேரசா மே முடிவு செய்துள்ளார்.
Discussion about this post