மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொள்ள இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் நாளை எண்ணப்படுகின்றன. இந்திய வரலாற்றிலேயே அதிகபட்சமாக தற்போதைய தேர்தலில் தான் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். அதன் ஒருபகுதியாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்த இருந்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற இருந்த இந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post