மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் பேரிடர் தொடர்பான ஆய்வுகளை நடத்தியது. பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிதல், பாதிப்புகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பேரிடர் ஏற்படும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் 10 ஆண்டுகளில் வெள்ளத்திற்கு மட்டும் 16 ஆயிரம் பேர் உயரிழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 47 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முற்றிலுமாக அழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post