திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
தாராபுரம் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பழமையான கட்டிடங்களை அகற்றக்கோரி நகராட்சி சார்பில் கட்டிடத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆபத்தான கட்டிடங்களை அகற்றுவதற்கு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடங்களை ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post