கடந்த 14ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் குடகு மாவட்டம் பெரியளவில் சேதத்தை சந்தித்துள்ளது. அந்த மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மழை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் குமாரசாமி, நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள், பெரியாறு மற்றும் வைகை அணை நிரம்பி உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்று படுகையில் உள்ள பல கிராமங்கள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சுமார் 14,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறையில் தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வைகை அணை ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், கரையோர இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post