மனைவியின் தோழி பேச மறுத்ததால் கழுத்தறுத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 17 ம் தேதி இரவு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியை தேடி வந்த சத்தியமங்கலம் போலீசார் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தாமோதரனை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியின் தோழியான லட்சுமியுடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும் சமீப நாட்களாக அவர் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவு லட்சுமி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தாமோதரன் சிறையில் அடைக்கப்பட்டார்
Discussion about this post