சொத்தை எழுதி தருமாறு மகன் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மனமுடைந்த தந்தை ஒருவர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகேயுள்ள செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகளுக்கு திருமணம் ஆன நிலையில் மகளுக்கு 80 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள 4 ஏக்கர் 20 சென்ட் நிலத்தினை இவரது மகன் குமார் என்பவர் தனக்கு எழுதிக் கொடுக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குழந்தைவேலு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். குழந்தைவேலை மீட்ட போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post