திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலம் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அருகே அமைந்துள்ள திருக்குளத்தை அப்பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழமை வாய்ந்த அந்த திருக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்து வந்ததாகவும் மற்றும் தீர்த்த குளமாக பயன்பட்டதாகவும் இப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். வறட்சியால் குளத்தை சுற்றி மரங்கள், செடிகொடிகள் வளர்ந்து உள்ளது. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து இந்த குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பருவ மழை வரும் நிலையில் குளத்தில் நீர் தேக்க முடியும் என்று இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கோயில் சாமி அபிஷேகத்திற்கும் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை நீங்குவதற்கும் ஒருங்கிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக
கூறுகின்றனர்.
Discussion about this post