பாஜகவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 4 இடங்களிலும் 7 இடங்களில் பாஜகவும் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் 22 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Discussion about this post